வியாழன், 3 ஜூன், 2010

ஞாயிற்றுத்தொகுதி

ஞாயிற்றுத்தொகுதி அல்லது சூரியக் குடும்பம் என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வான்பொருட்களையும் உள்ளடக்கியது. சூரியனைச் சுற்றி வரும் எட்டுக் கோள்களையும், இக்கோள்களின் 162 (இது வரை தெரிந்த கணக்கெடுப்பின் படி) துணைக்கோள்களையும், மூன்று குறுங்கோள்களையும், அக் குறுங்கோள்களின் நான்கு உபகோள்களையும் மற்றும் ஆயிரக்கணகான பிற வான்பொருள்களையும் உள்ளடக்கியது. பிற வான்பொருள்களாவன, விண்கற்கள் எரிகற்கள் வால்வெள்ளி, , மற்றும் விண்மீன்களின் இடையே உள்ள விண்துகள்கள் ஆகும். சுமார், 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒரு பிரமாண்டமான சக்திதிரல்(பிரபஞ்ச நெபுலா) நுண்கூறுகளாக நொறுங்கியதில் இருந்து, ஈர்ப்பு விசையால் இழுக்கப்படும் பல விண்ணுலகக் காட்சிப் பொருள்கள் அதாவது அண்டங்கள் தோன்றின: அதனுள் பால்வெளி அண்டத்துள் அடங்கும் சூரியனை மைய ஸ்தானத்தில் கொண்டதுதான் சூரிய குடும்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக