சனி, 12 ஜூன், 2010

மூலிகைத் தோட்டம்

மூலிகைத் தோட்டம் என்பதன் வரைவிலக்கணம்

அழிந்து கொண்டு செல்லும் மூலிகைகளைப் பாதுகாக்கவும் அரிதாகக் கிடைக்கும் மூலிகைகளை பரம்பல் படுத்துவதற்கும,; எல்லா வகையான மூலிகைகளையும் அவற்றின் பயன்களையும் அறிந்து கொள்வதற்கும்; அத்தியவசியமாக அமைவது மூலிகைத் தோட்டமாகும்.

மூலிகைத் தோட்டம் பற்றி ஓர் அறிமுகம்

சித்த மருத்துவத்தில் மருந்தாக தாவரங்களில் இருந்து பெறப்படும் மருந்துகளே பயன்படுகின்றன. இவை இயற்கையானதாகவும் தெய்வீகமானதாகவும் விளங்குகின்றது. இம் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. இதனால் மக்களால் பெரிதும் விரும்பப்படுலதில்லை.
மேலைத் தேய நாடுகளில் காணப்படும் மூலிகைகளில் உள்ள வேதியற் பொருட்களிலும் பார்க்க கீழைத்தேய நாடுகளில் காணப்படும் வேதியற் பொருட்கள் வினைத்திறனானவை. எனவே இம் மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான மூலிகைகள் தாவரங்கள் என்பவற்றை இனங்காணுதலும் உற்பத்திசெய்தலும் பாதுகாத்தலும் அவசியமானதொன்றாகும்.
மருத்துவ மூலிகைகள் தேவைக்கேற்ப சிறிய அளவிலான வீட்டுத்தோட்டங்களிலும் பெரிய அளவிலான தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. இவை பயிரிடப்படும் போது இடம,; காலம், மண்ணின்தன்மை, வளர்ச்சிக்கான வசதிகள், வாழும்காலம், பயன்தரும்காலம் என்பன மிக முக்கியமாக கொள்ளப்படுகின்றன. இவற்றை பருவ காலத்தின் அடப்படையில் மட்டுமல்லாது நோய் தீர்க்கும் அடப்படையிலும் பயிரிடலாம்.
மருத்துவ மூலிகைகளைப் பயிரிட்டு வளர்க்கும் போது அவற்றிற்கேற்படக்கூடய தீங்குகள், அதாவது களைகள், புச்சிகள் என்பன பற்றியும், அவற்றை நிவர்த்திக்கும் வழி முறைகள் பற்றியும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவற்றை பயிரிடுவதற்கான மூலங்ககளை விவசாய சந்தையிலோ, அல்லது வேறு இடங்களிலோ பெறலாம். இவற்றை உணவு, மருந்து மூலம் உள்ளெடுக்கலாம். எனவே நோயின்றி வாழ்வதற்கு இயற்கை வைத்தியம் சிறந்தது. நோய் தீர்க்கும் மூலிகைகளை பயிடுவதற்கான மூலிகைத் தோட்டம் அமைப்பது பற்றி இச் செயற்திட்டம் அமைகிறது.


மூலிகைத் தோட்டம் அமைப்பதன் பொதுவான நோக்கம்
மூலிகை இனங்களை அழியாது பாதுகாப்பதோடு அவற்றை இணங்கண்டு அவற்றையும் அவற்றின் பயன்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இதன் பொதுவான நோக்கமாகும்.

மூலிகைத் தோட்டம் அமைப்பதன் பிரத்தியேக நோக்கங்கள்
 பெதுமக்களிடையே மூலிகைகளையும் அவற்றின் நன்மைகளையும் அறியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தல்
 அரிதான இனத்தைப் பரம்பலடையச் செய்து அழியவிடாது பாதுகாத்தல்
 சித்த மருத்துவ மாணவர், விவசாயபீட மாணவர், பாடசாலை மாணவர் என்போரிடம் மூலிகைகள்பற்றியும், செயற்றிறன் பற்றியும், உருவவியல் பற்றியும் பரந்த அறிவை ஏற்படுத்தல்.
 மூலிகைத் தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குதல்.
 வைத்திய முறைகனை பக்க விளைவுகள் ஏற்படாத வண்ணம் மூலிகைகளைக் கொண்டு வழங்குதல்.
 நாட்டின் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் அந்நிய செலாவணியை பெறலாம்.
 இயற்கையில் இருந்து நேரடியாக பெறப்பட்டு தாவரங்கள் இனம் பெருகுவதால் குறைந்த விலையில் பெறுமதியான மூலிகைகளை உற்பத்தி செய்யலாம்.
 சூழல் மாசடைதல், மண்ணரிப்பு என்பன தடுக்கப்படும், மண் வளம் பெருகும்.
 இயற்கை பசளைகள் பயன்படுத்துவதால் உற்பத்திப் பொருட்களில் இரசாயணத் தன்மை குறைவு.
 மருந்து செய்யும் நிலையங்களுக்கு மூலிகைகள் தூய்மையானதாகவும், இயற்கையானதாகவும் கொடுக்கப்படுவதால் தரமான மூலிகை மாத்திரைகளை உற்பத்தி செய்யலாம்.
 தாவரவியல் சார்ந்த ஆய்வாரள்களின் ஆராய்ச்சிக்கு பயன்படும்.

மிகுதி வரும் வாரம் …

1 கருத்து: